/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின் மயான கட்டுமான பணிகள்; மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மின் மயான கட்டுமான பணிகள்; மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
மின் மயான கட்டுமான பணிகள்; மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
மின் மயான கட்டுமான பணிகள்; மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
மின் மயான கட்டுமான பணிகள்; மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஜூன் 10, 2025 09:38 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில், மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேற்று ஆய்வு செய்தார். இதில், கிருஷ்ணசாமிபுரத்தில், 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம், விவேகானந்தர் வீதியில், 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டட பணிகள் மற்றும் காமராஜர் காலனிக்கு உட்பட்ட பகுதியில், 1.54 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மின் மயானம் போன்ற இடங்களை ஆய்வு செய்து, அதன் விபரங்கள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பேரூராட்சி தலைவர் கதிர்வேல், துணைத்தலைவர் பாலகுமார், செயல் அலுவலர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டரிடம், கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் மற்றும் மார்க்கெட் அருகே உள்ள சர்வீஸ் ரோடு விரிவாக்க பணிகள் தாமதம் ஆவதால் ஏராளமான பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து தர வேண்டும், என, பேரூராட்சி தலைவர் வலியுறுத்தினார்.