/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பணியாளர் பற்றாக்குறையால் குப்பை அகற்றுவதில் தொய்வு பணியாளர் பற்றாக்குறையால் குப்பை அகற்றுவதில் தொய்வு
பணியாளர் பற்றாக்குறையால் குப்பை அகற்றுவதில் தொய்வு
பணியாளர் பற்றாக்குறையால் குப்பை அகற்றுவதில் தொய்வு
பணியாளர் பற்றாக்குறையால் குப்பை அகற்றுவதில் தொய்வு
ADDED : மார் 24, 2025 11:59 PM

மேட்டுப்பாளையம்; தேக்கம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணிகள், சரியாக நடைபெறுவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம்,தேக்கம்பட்டி ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தூய்மை பணியானது, சரியாக நடைபெறுவது இல்லை. வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய, போதிய தூய்மை பணியாளர்கள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதனால், குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. குரும்பனூர் காவேரி அம்மன் காலனி, வெல்ஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாக்கடைகள் சுத்தம் செய்யாததால், கழிவு நீர் தேங்கியும், குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் சாக்கடையை அடைத்துக் கொண்டும் உள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடந்த போது, வாரம் ஒரு முறையாவது குப்பைகளை அகற்றியும், சாக்கடையை சுத்தம் செய்தும் வந்தனர். தற்போது ஊராட்சி நிர்வாகம், தனி அலுவலர் பொறுப்புக்கு வந்த பிறகு, ஊராட்சியில் தூய்மைப் பணிகள் சரியாக நடைபெறவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) மகேஸ்வரி கூறுகையில், காரமடை ஒன்றியத்தில் தேக்கம்பட்டி மிகவும் பெரிய ஊராட்சியாகும்.
இந்த ஊராட்சியில் குப்பைகளை எடுக்கவும், சாக்கடைகளை சுத்தம் செய்யவும் போதுமான தூய்மை பணியாளர்கள் இல்லை. விரைவில் ஆட்களை அமர்த்தி, தூய்மை பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.