/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பால் சங்கத்தில் பிடிக்கப்பட்ட தொகை வழங்கும் நிகழ்ச்சி பால் சங்கத்தில் பிடிக்கப்பட்ட தொகை வழங்கும் நிகழ்ச்சி
பால் சங்கத்தில் பிடிக்கப்பட்ட தொகை வழங்கும் நிகழ்ச்சி
பால் சங்கத்தில் பிடிக்கப்பட்ட தொகை வழங்கும் நிகழ்ச்சி
பால் சங்கத்தில் பிடிக்கப்பட்ட தொகை வழங்கும் நிகழ்ச்சி
ADDED : ஜன 02, 2024 11:44 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, கொழிஞ்சாம்பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பிடித்த தொகையை மீண்டும் வழங்கும் விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே, கொழிஞ்சாம்பாறை கே.கே.பதி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், பிடிக்கப்பட்ட தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட காங்., தலைவர் தங்கப்பன் தலைமை வகித்தார். கே.கே.பதி பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கே.கே.பதி பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கூறியதாவது:
கடந்த, 2021ம் ஆண்டு செப்., 11ம் தேதி முதல், 2022 ஜூன் 30ம் தேதி வரை, பால் உற்பத்தி அதிகமாக வந்ததால், குறிப்பிட்ட அளவு லிட்டர் மட்டுமே வழங்க வேண்டும்.
அதற்கு மேல் வந்தால் சங்கத்தின் வாயிலாக லிட்டர் பாலுக்கு என கணக்கீட்டு பணம் பிடிக்கப்பட்டது. மொத்தம், 27 லட்சம் ரூபாய் வரை பிடித்தம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிலையில், பிடிக்கப்பட்ட தொகையை உற்பத்தியாளர்களுக்கு திரும்ப வழங்க நிர்வாக குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான துவக்க விழா நடத்தப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தியாளர்கள் வங்கி கணக்குக்கு பணம் செலுத்தப்படும்.
இவ்வாறு, கூறினார்.