/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரிடியம் மோசடி வழக்கில் தலைமறைவான நபர் கைது இரிடியம் மோசடி வழக்கில் தலைமறைவான நபர் கைது
இரிடியம் மோசடி வழக்கில் தலைமறைவான நபர் கைது
இரிடியம் மோசடி வழக்கில் தலைமறைவான நபர் கைது
இரிடியம் மோசடி வழக்கில் தலைமறைவான நபர் கைது
ADDED : செப் 14, 2025 11:34 PM

கோவை; இரிடியம் மோசடி வழக்கில், தலைமறைவான மும்பை நபர், கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டத்தில், இரிடியம் என்ற உலோகம் மோசடி வழக்கில், தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
திருச்சியில் இரிடியம் தொடர்பான, முக்கியமான குற்றவாளி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், விரைந்து சென்ற தனிப்படையினர், மும்பை, மன்கர்டு பகுதியை சேர்ந்தஞானசேகர்,42, என்பவரை மடக்கி பிடித்து, கைது செய்தனர்.
விசாரணையில், வெளிநாட்டு சந்தைகளில் பல்லாயிரம் கோடிகள் விலை போகும் என்று ஆசை வார்த்தை கூறி, போலியான இரிடியத்தை காட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரிடமிருந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட சொகுசு கார், ஐந்து லட்சம் ரூபாய், ஐந்து சவரன் நகை, விலை உயர்ந்த மொபைல்போன் மற்றும் கைகடிகாரம் கைப்பற்றப்பட்டன.