/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இனி மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கும் இனி மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கும்
இனி மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கும்
இனி மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கும்
இனி மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கும்
ADDED : செப் 09, 2025 10:39 PM
கோவை; கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு, சீராக குடிநீர் வினியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தெற்கு மண்டலம், குறிச்சி மற்றும் குனியமுத்துார் பகுதிகளில் உள்ள, 11 மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகள் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
குடிநீர் வினியோக பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தில், புதிதாக, 11 மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு, குறிச்சி பகுதியில், 85 மற்றும், 94 முதல் 98 வரையுள்ள வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தின் மேல்பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, இதர பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, 99, 100வது வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு, குடிநீர் நீரேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சில இடங்களில், சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. சோதனை ஓட்டம் முடிந்ததும், இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என, ஆய்வின்போது, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.