/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டிரினிட்டி கண் மருத்துவமனையில் இலவச மான்சூன் கேர் பேக்கேஜ் முகாம் டிரினிட்டி கண் மருத்துவமனையில் இலவச மான்சூன் கேர் பேக்கேஜ் முகாம்
டிரினிட்டி கண் மருத்துவமனையில் இலவச மான்சூன் கேர் பேக்கேஜ் முகாம்
டிரினிட்டி கண் மருத்துவமனையில் இலவச மான்சூன் கேர் பேக்கேஜ் முகாம்
டிரினிட்டி கண் மருத்துவமனையில் இலவச மான்சூன் கேர் பேக்கேஜ் முகாம்
ADDED : ஜூலை 28, 2024 01:22 AM
கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் உள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில், ஆக., 7 ம் தேதி வரை நடக்கும் கண் பரிசோதனை முகாமில், ரூ.750 மதிப்பிலான மான்சூன் கேர் பேக்கேஜ் இலவசமாக அளிக்கப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
இந்தியாவில், 72 சதவீதம் பேருக்கு கண்புரை காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கண்புரை எந்த வயதினரையும் பாதிக்கும். மங்கலான பார்வை மற்றும் பார்வை இழப்பை இது ஏற்படுத்தும்.
இதை சரி செய்து பார்வையை முழுமையாக மீட்டெடுக்க, உள்விழி லென்சை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றப்படுகிறது. கண்புரை அறுவை சிகிச்சையை தையல் மற்றும் வலி இன்றி குறுகிய காலத்தில் மேற்கொள்ளலாம். டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில் இதற்கான அனைத்து நவீன உபகரணங்கள், வசதிகள் உள்ளன. மேம்பட்ட லென்ஸ்களை பயன்படுத்துவதன் வாயிலாக, கண்ணாடிகளை முற்றிலுமாக அகற்றி பார்வையை மீண்டும் பெறமுடியும். மருத்துவமனை கண்புரை அறுவை சிகிச்சை பிரிவில், 25க்கும் மேற்பட்ட நிபுணர்கள் உள்ளனர்.
மழைக்காலத்தில் கண்களை உலர் கண், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் அதிகம் பாதிக்கிறது. இதை பரிசோதனை மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.
மருத்துவமனையில், இலவச மான்சூன் கேர் பேக்கேஜ் முகாம், வரும் ஆக., 7 ம் தேதி வரை நடக்கிறது. ரூ.750 மதிப்புள்ள இந்த பேக்கேஜில் ரத்த சர்க்கரை, கண்புரை மற்றும் வழித்திரை பரிசோதனைகள், ஆப்டோமெட்ரிஸ்ட் மதிப்பீடு, உலர் கண், கண் அழுத்த பரிசோதனைகள் மற்றும் மருத்துவர் ஆலோசனையை இலவசமாக பெறலாம்.
முதலில் பதிவு செய்யும், 500 பேருக்கு, குடும்ப கண் பரிசோதனைக்கான அட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்படும், 50 பேருக்கு 6 மாதங்களுக்கு 'தினமலர்'நாளிதழ் இலவசமாக வழங்கப்படும்.
பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 77369 05222 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.