/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொங்குநாடு மருத்துவமனையின் பஸ்சில் இலவச மருத்துவ வசதி கொங்குநாடு மருத்துவமனையின் பஸ்சில் இலவச மருத்துவ வசதி
கொங்குநாடு மருத்துவமனையின் பஸ்சில் இலவச மருத்துவ வசதி
கொங்குநாடு மருத்துவமனையின் பஸ்சில் இலவச மருத்துவ வசதி
கொங்குநாடு மருத்துவமனையின் பஸ்சில் இலவச மருத்துவ வசதி
ADDED : ஜூன் 07, 2025 01:17 AM

தொண்டாமுத்தூர்; கொங்குநாடு மருத்துவமனை சார்பில், இலவச நடமாடும் பஸ் மருத்துவ கிளினிக் துவக்க விழா, தீனம்பாளையத்தில் உள்ள கொங்குநாடு நர்சிங் கல்லூரியில் நேற்று நடந்தது.
மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜு தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இலவச நடமாடும் பஸ் மருத்துவ கிளினிக் சேவையை கொடி அசைத்து, துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பஸ்சில் உள்ள மருத்துவ ஆலோசனை அறை, எக்ஸ் ரே, இ.சி.ஜி., மருந்தகம், ஆய்வகம், அவசர சிகிச்சை அறை உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டு பாராட்டினார்.
இவ்விழாவில், கொங்குநாடு மருத்துவமனையின் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு, ஆர்த்தி, நைட்டிங்கேல்ஸ் கல்வி குழும தலைவர் மனோகரன் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.