/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின்வாரிய பெட்டியில் தீ; மக்கள் அணைத்தனர் மின்வாரிய பெட்டியில் தீ; மக்கள் அணைத்தனர்
மின்வாரிய பெட்டியில் தீ; மக்கள் அணைத்தனர்
மின்வாரிய பெட்டியில் தீ; மக்கள் அணைத்தனர்
மின்வாரிய பெட்டியில் தீ; மக்கள் அணைத்தனர்
ADDED : மார் 22, 2025 11:23 PM

கோவை: ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள சாலையோர மின்வாரிய பெட்டியில் ஏற்பட்ட தீயை, பொது மக்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர்.
அவிநாசி சாலை, ஹோப் காலேஜ் சிக்னல் அருகில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மின்வாரிய பெட்டியில், நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, பெட்டியில் இருந்து புகை வருவதை பார்த்த போது மக்கள் சிலர், தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். அப்போது, அப்பகுதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து, தீயணைப்பான் எடுத்து வந்த நபர் ஒருவர் அதை தீயின் மீது செலுத்தி, தீயை அணைத்தார்.