Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அலங்கார விளக்குகள் குடோனில் தீ விபத்து 

அலங்கார விளக்குகள் குடோனில் தீ விபத்து 

அலங்கார விளக்குகள் குடோனில் தீ விபத்து 

அலங்கார விளக்குகள் குடோனில் தீ விபத்து 

ADDED : ஜூன் 07, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
கோவை; அவிநாசி சாலையில் உள்ள அலங்கார விளக்குகள் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில், 'லைட்டுகள்' கருகி நாசமாகின.

கோவை, அவிநாசி சாலை, வ.உ.சி., மைதானம் அருகில் உள்ள காம்பிளக்சின் முதல் மாடியில் தனியார் அலங்கார விளக்குகள் குடோன் செயல்பட்டு வருகிறது.

இதன் தரை தளத்தில் வங்கியும், இரண்டாம் தளத்தில் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. நேற்று மாலை, 3:30 மணியளவில் அலங்கார விளக்குகள் இருந்த குடோனில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் அது தீயாக பரவியது. எலக்டிரிக்கல் பொருட்கள் என்பதால், தீ மளமளவென பரவியது. வங்கி, அலுவலகங்களில் இருந்தவர்கள் அனைவரும் பதறியடித்து வெளியேறினர்.

தகவல் அறிந்து தீயணைப்புத்துறை கோவை மாவட்ட உதவி அலுவலர் அழகர்சாமி தலைமையில் 25 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அரை மணி நேரத்திற்குள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், குடோனில் வைக்கப்பட்டிருந்த எலக்டிரிக்கல் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us