/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெண்ணை மிரட்டி ரூ.5.80 லட்சம் பறிப்புபெண்ணை மிரட்டி ரூ.5.80 லட்சம் பறிப்பு
பெண்ணை மிரட்டி ரூ.5.80 லட்சம் பறிப்பு
பெண்ணை மிரட்டி ரூ.5.80 லட்சம் பறிப்பு
பெண்ணை மிரட்டி ரூ.5.80 லட்சம் பறிப்பு
ADDED : ஜன 07, 2024 02:04 AM
கோவை;கோவையை சேர்ந்தவர், 27 வயது இளம்பெண். திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் அகமது அகில், 24, என்ற சமையல் தொழிலாளிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இந்த பழக்கம், தகாத உறவாக மாறியது. அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை, அகமது அகில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
அதனை அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் காட்டி விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணிடம் இருந்து ரூ.5.80 லட்சம் பறித்துள்ளார். தொடர்ந்து மிரட்டி பணம் கேட்டு வந்ததால், அந்த பெண் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, அகமது அகிலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.