/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கேள்விக்குறியாகும் தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகும் தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்ப்பு
கேள்விக்குறியாகும் தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்ப்பு
கேள்விக்குறியாகும் தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்ப்பு
கேள்விக்குறியாகும் தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 16, 2025 08:24 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில், வேலை செய்யும் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்று பகுதிகளில், நூற்றுக்கணக்கில் சிறு, குறு, நிறுவனங்கள், பெரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. நாளுக்கு நாள் புதிதாக நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன.
இருந்தாலும், தொழிலாளர்கள் பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் மட்டும், 6 பேர் பணியின் போது விபத்தால் உயிரிழந்தனர். இதில், மின்சாரம் தாக்குதல், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது, விதிமுறையை கடைபிடிக்காதது உள்ளிட்ட காரணங்களாலும், கவனக்குறைவினாலும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்க, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவ காப்பீடு, நிறுவனத்தில் அதிக தொழிலாளர்கள் இருந்தால் (500 நபர்கள் மேல்) டாக்டர் மற்றும் செவிலியருடன் கூடிய மருத்துவ வசதி, அவசர வழி, முதலுதவி பெட்டி போன்றவைகள் இருக்க வேண்டும்.
மேலும், பணியின் போது பாதுகாப்பு தலைக்கவசம், சேப்டி ஷூ, கையுறை போன்றவைகள் நிறுவனங்கள் வழங்குவது அவசியம். இது மட்டுமின்றி நிறுவனத்தில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால், அதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆனால், ஒரு சில விதிமுறையை பின்பற்றாத நிறுவனங்கள், தொழிலாளர் நலனில் அக்கறை காட்டாமல் செயல்படுகின்றன. எனவே, விதிமுறை மீறி செயல்படும் நிறுவனங்களை, தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.