/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாலித்தீன் கவரில் சுற்றுச்சூழல் 'பார்சல்...!' அபாயம் வளர்க்கும் 'எதிரிகள்': அசால்ட்டாக அதிகாரிகள்! பாலித்தீன் கவரில் சுற்றுச்சூழல் 'பார்சல்...!' அபாயம் வளர்க்கும் 'எதிரிகள்': அசால்ட்டாக அதிகாரிகள்!
பாலித்தீன் கவரில் சுற்றுச்சூழல் 'பார்சல்...!' அபாயம் வளர்க்கும் 'எதிரிகள்': அசால்ட்டாக அதிகாரிகள்!
பாலித்தீன் கவரில் சுற்றுச்சூழல் 'பார்சல்...!' அபாயம் வளர்க்கும் 'எதிரிகள்': அசால்ட்டாக அதிகாரிகள்!
பாலித்தீன் கவரில் சுற்றுச்சூழல் 'பார்சல்...!' அபாயம் வளர்க்கும் 'எதிரிகள்': அசால்ட்டாக அதிகாரிகள்!

கால்வாய்களில் அடைப்பு
பொள்ளாச்சி நகரம், கிராமங்களில், பிளாஸ்டி கவர், டம்ளர், தண்ணீர் பாட்டில் போன்றவை ரோட்டோரங்களில் வீசப்படுகிறது. அவை மழைநீர் வடிகால் கால்வாய்கள், நீரோடைகளை சென்றடைவதால், மழை காலங்களில் மழைநீர் வெளியேறுவதில் பெரும் இடையூறு ஏற்பட்டு, ரோட்டில் மழை வெள்ளம் செல்கிறது.
தீ வைப்பு
கிராமங்களில் குப்பை தரம் பிரித்து பெறுவதில்லை. பாலித்தீன் பயன்பாட்டை கண்காணித்து எந்த துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், காணுமிடம் எல்லாம், பிளாஸ்டிக் கழிவு குவிந்து கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகத்தினரே, பிளாஸ்டிக் கழிவை பிற கழிவுகளுடன் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
கால்நடைகள் பாதிப்பு
ரோட்டில் மேய்ச்சலுக்காக சுற்றும் மாடு உள்ளிட்ட கால்நடைகள், குப்பை கழிவுகளுக்குள் பிளாஸ்டிக் கவரில் வீசப்படும் காய்கறி, உணவு கழிவை உட்கொள்கின்றன. கால்நடைகளின் உணவுக்குழாயில் பிளாஸ்டிக் கழிவு அடைத்துக் கொண்டால், உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
தீர்வு தேவை!
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்த, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.