/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மே 22, 2025 12:33 AM

கோவை, ; தமழ்நாடு மின்வாரிய ஓய்வு பெறுவோர் நலஅமைப்பு சார்பில் நேற்று, டாடாபாத் மின்வாரிய மத்திய அலுவலக வளாகத்தில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு, கொரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், எட்டு பெண் ஓய்வூதியதாரர்கள் உட்பட, 50 பேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், டி.என்.இ.பி.டபிள்யூ.ஓ., அமைப்பின் தலைவர் ஞானபிரகாசம், செயலாளர் விவேகானந்தன், கோவை மண்டல செயலாளர் சுந்தரேசன், கோவை மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர், முன்னிலை வகித்தனர்.