ADDED : பிப் 06, 2024 12:53 AM
கோவை:குனியமுத்துார் மின் வாரிய அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு, மேற்பார்வை பொறியாளர் (கோவை, தெற்கு) சுப்ரமணியன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் மின்வாரியம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என, குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.