கார்கே பேச்சு: காங்கிரசுக்கு மானம் போச்சு!
கார்கே பேச்சு: காங்கிரசுக்கு மானம் போச்சு!
கார்கே பேச்சு: காங்கிரசுக்கு மானம் போச்சு!
ADDED : செப் 14, 2025 07:19 AM

காங்கிரசின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, 83, கர்நாடகாவைச் சேர்ந்தவர். கட்சி கூட்டங்களில் பேசும் போது, அடிக்கடி கோபப்படுகிறார்; கண்டபடி பேசுகிறார். இது, கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் சமீபத்தில் பேசிய கார்கே, 'தேர்தலுக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்தோம்; ஆனால், குஜராத் காங்கிர சார் வேலை செய்யாமல் பணத்தை ஏப் பம்விட்டனர்' என, கூறினாராம். 'வரும், 2027ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க வேண்டும். இதை புரிந் துகொண்டு பணியாற்றுங்கள்' என, பேசியுள்ளார். இது, தொண் டர்களை விட்டதாம். பெரிதும் பாதித்து விட்டதாம்.
ராஜஸ்தானில் நடைபெற்ற காங்., கூட்டத்தில், இன்னொரு மிகப்பெரிய தவறை செய்தார் கார்கே. 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார்' என பேசுவதற்கு பதிலாக, 'ராகுல் கொல்லப்பட்டார்' என, பேசி விட்டார். மேடையில் இருந்தவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்; உடனே தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார், கார்கே. 'வயதாகிவிட்டது, ஞாபக சக்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாம் என்ன பேசுகிறோம் என்பதே அவருக்கு தெரி யவில்லை. ஏதோ பெயருக்கு தலைவராக உள்ளார். பட்டி யலினத்தைச் சேர்ந்தவர். இதனால், இவரை பதவியிலிருந்து நீக்க முடியாது. எனவே, அவர் உளறுவதை பொறுத்து தான் போக வேண்டும்' என்கின்றனர், சீனியர் தலைவர்கள்.