/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இ - சலான் மோசடி போயிருச்சு; கிரெடிட் கார்டு மோசடி வந்திருச்சு! இ - சலான் மோசடி போயிருச்சு; கிரெடிட் கார்டு மோசடி வந்திருச்சு!
இ - சலான் மோசடி போயிருச்சு; கிரெடிட் கார்டு மோசடி வந்திருச்சு!
இ - சலான் மோசடி போயிருச்சு; கிரெடிட் கார்டு மோசடி வந்திருச்சு!
இ - சலான் மோசடி போயிருச்சு; கிரெடிட் கார்டு மோசடி வந்திருச்சு!
ADDED : ஜூன் 16, 2025 10:12 PM

கோவை; கிரெடிட் கார்டு உச்ச வரம்பை அதிகரித்து தருவதாக, புதுவித மோசடி அரங்கேறி வருவதால் விழிப்புடன் இருக்க, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், அது சார்ந்த குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன. போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஒரு மோசடி குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால், மோசடி நபர்கள் அடுத்த மோசடியை அரங்கேற்றத் துவங்குகின்றனர்.
சமீபத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கான, 'இ - சலான்' நடைமுறையில், பணத்தை திருடினர். இதைத்தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதையடுத்து இக்குற்றம் குறைந்தது.
இந்நிலையில், கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்தி தருவதாக கூறி, புதுவித மோசடி அரங்கேறத் துவங்கியுள்ளது. கிரெடிட் கார்டு வைத்துள்ள நபர்களை, தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தேவையான தகவல்களை லாவகமாக பேசி வாங்குகின்றனர்.
தகவல்கள் கிடைத்ததும், வரம்பு உயர்த்துவதாக கூறி 'லிங்க்' ஒன்றை அனுப்புகின்றனர். அந்த லிங்கை தொட்ட உடன், வங்கிக்கணக்கில் இருந்து பணம் மாயமாகி விடுகிறது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் போலீஸ் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து, வரும் அழைப்புகள் குறித்து, கவனமுடன் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு வரம்பை அதிகரித்து தருவதாக கூறினால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் கேட்கும் தகவல்களை தரக்கூடாது. குறிப்பாக, ஓ.டி.பி.,யை வேறு யாருக்கும் பகிரக்கூடாது' என்றார்.