/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ரிப்ளக்டர்' பொருத்த ஓட்டுநர்கள் கோரிக்கை 'ரிப்ளக்டர்' பொருத்த ஓட்டுநர்கள் கோரிக்கை
'ரிப்ளக்டர்' பொருத்த ஓட்டுநர்கள் கோரிக்கை
'ரிப்ளக்டர்' பொருத்த ஓட்டுநர்கள் கோரிக்கை
'ரிப்ளக்டர்' பொருத்த ஓட்டுநர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 12, 2025 10:04 PM
வால்பாறை; வால்பாறை - சோலையாறு ரோட்டில் விபத்துக்களை தவிர்க்க, இரவு நேரத்தில் ஒளிரும் 'ரிப்ளக்டர்' அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரில் இருந்து சோலையாறு வழியாக, கேரள மாநிலம் சாலக்குடி ரோட்டில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் செல்கின்றனர்.
பழைய வால்பாறை, உருளிக்கல் வழியாக சோலையாறு அணை வரை செல்லும் ரோட்டில், பல இடங்களில் வழிகாட்டி பலகை வைக்கப்படவில்லை.இரவு நேரங்களில் வாகனங்கள் அதிக அளவில் செல்லும் நிலையில், முக்கிய இடங்களில் 'ரிப்ளக்டர்' இல்லாததால் விபத்துகள் ஏற்படுகிறது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
விபத்து ஏற்படாமல் தவிர்க்க, வால்பாறை நகரிலிருந்து ஆழியாறு வரையிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில்'ரிப்ளக்டர்' அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன விபத்தும் குறைந்துள்ளது.
அதே போல், வால்பாறையிலிருந்து சோலையாறு அணை வரையிலும் இரவு நேரத்தில் ஒளிரும் 'ரிப்ளக்டர்கள்' அமைக்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த ரோடாக உள்ளதால், 'ரிப்ளக்டர்கள்' அமைப்பது மிக அவசியம். மேலும், முக்கியமயான இடங்களில் வேகத்தடையும் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.