/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை 'ஜோர்' கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை 'ஜோர்'
கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை 'ஜோர்'
கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை 'ஜோர்'
கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை 'ஜோர்'
ADDED : ஜூன் 12, 2025 10:05 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சமத்துாரில் சாலையோரம் பல்வேறு வண்ணங்களில், கோழி குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகிறது.
எட்டு கோழிக் குஞ்சுகள், நுாறு ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து, ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது:
பல்லடத்தில் இருந்து, தருவிக்கப்பட்ட பிராய்லர் கோழிக்குஞ்சுகள் மீது, பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ணங்கள் தீட்டப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. வாகனங்களில் செல்பவர்கள், கோழிக்குஞ்சுகளின்'கீச் கீச்' சப்தம் கேட்டு,நேரடியாக காண முற்படுகின்றனர். ரசிப்பதுடன் வாங்கியும் செல்கின்றனர். இதுதவிர, உள்ளூரில் தோட்டம் வைத்திருப்பவர்களும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர்களும்குஞ்சுகளை வாங்குகின்றனர். குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்ப, கலர்கலராக கோழிக்குஞ்சுகளை தேர்வு செய்கின்றனர். ஓரளவுக்கு லாபம் கிடைக்கிறது. விற்பனைக்கு ஏற்ப, அவ்வப்போது இடத்தையும் மாற்றி வருகிறோம்.
இவ்வாறு, கூறினர்.