Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்காதீர்! ஒலி மாசு ஏற்படுவதால் மக்களுக்கு பாதிப்பு

குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்காதீர்! ஒலி மாசு ஏற்படுவதால் மக்களுக்கு பாதிப்பு

குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்காதீர்! ஒலி மாசு ஏற்படுவதால் மக்களுக்கு பாதிப்பு

குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்காதீர்! ஒலி மாசு ஏற்படுவதால் மக்களுக்கு பாதிப்பு

ADDED : ஜூன் 24, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
கோவை; 'குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில், புதிதாக தொழிற்சாலைகள் துவங்கக் கூடாது. நீண்ட காலத்துக்கு முன் அமைத்திருந்தால், ஒலி மாசு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்; இரவு ஷிப்ட்டுகளை தவிர்க்க வேண்டும்' என, மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தொழில் நகரான கோவையில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் சில, 24 மணி நேரமும், சில 12 மணி நேரமும் செயல்படுகின்றன. நகர விரிவாக்கம் காரணமாக, பல ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கணபதி, ஆவாரம்பாளையம் பகுதிகளில் புஷ், போல்ட், நட், ஆனி, ஸ்குரு, கம்ப்ரசர் தகடுகள், மோட்டாருக்கு பயன்படுத்தும் ஸ்டாம்பிங், ரோட்டார், காஸ்டிங் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.

இத்தொழிற்சாலைகளில் இரவு - பகல் பாராமல் பணிகள் நடக்கின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ஒலி மாசால், இரவு நேரத்தில் குடியிருப்பு வாசிகள் துாக்கத்தை இழந்து துன்பத்தை அனுபவிக்கின்றனர். இரவு நேரத்தில் துாங்க முடியாமலும், பகலில் அன்றாட பணிகளை சரியாக மேற்கொள்ள முடியாமலும் அவதிப்படுகின்றனர்.இப் பிரச்னைகளை நிரந்தரமாக தீர்க்க, மாசு கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் உற்பத்தி மேற்கொள்ளும்போது, 42 டெசிபல் முதல், 50 டெசிபலுக்குள் சப்தம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம், 60 டெசிபல் வரை இருக்கலாம்; அதற்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளின் மேற்கூரை உயரமாக இருக்க வேண்டும். உற்பத்தி நேரத்தின்போது சப்தம் வெளியேறாமல் இருக்க, அறிவியல் ரீதியான நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். இரவு நேர ஷிப்டுகளை குடியிருப்புக்கு அருகே உள்ள தொழிற்சாலைகள் கைவிடுவது நல்லது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) சுமித்ராபாய் கூறுகையில், ''பாதுகாப்பான தொழில்கள், சுத்தமான காற்று, சரியான ஒலி ஆகிய தரநிலைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்கிறது. அதில், இடர் ஏற்படும்போது, ஆய்வு செய்து, கட்டுக்குள் கொண்டு வருகிறோம்.

மாசு ஏற்படாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொள்கிறோம். குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலைகளால் ஒலி மாசு ஏற்படுவதாக புகார் வந்தால், கள ஆய்வு செய்து அறிவுரை வழங்குவோம். புகார் ஊர்ஜிதமாகும் பட்சத்தில், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவோம்; கால அவகாசம் கொடுப்போம். அதன் பின்பே, நடவடிக்கைகள் மேற்கொள்வோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us