/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க மாநகர பகுதியில் 50 தொட்டிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க மாநகர பகுதியில் 50 தொட்டிகள்
பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க மாநகர பகுதியில் 50 தொட்டிகள்
பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க மாநகர பகுதியில் 50 தொட்டிகள்
பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்க மாநகர பகுதியில் 50 தொட்டிகள்
ADDED : ஜூன் 24, 2025 12:09 AM

கோவை; பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து சேகரிக்க, கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், 50 தொட்டிகள் நேற்று வைக்கப்பட்டன.
கோவை மாநகராட்சி பகுதிகளில், குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குப்பை கழிவுகளுடன், பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பது மேலாண்மை பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால், பிளாஸ்டிக் பாட்டில்களை பிரத்யேகமாக சேகரிக்க, தனி தொட்டிகள் மாநகரில் வைக்கப்பட்டு வருகின்றன.
தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட காந்திபுரம், உக்கடம், வ.உ.சி., பூங்கா, ரேஸ்கோர்ஸ் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேற்று, 22 தொட்டிகள் வைக்கப்பட்டன.
கிழக்கு மண்டலத்தில் சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஐந்து, மேற்கு மண்டலம் வடவள்ளி, மருதமலை, டி.பி., ரோடு உள்ளிட்ட இடங்களில், 10 தொட்டிகள், தெற்கு மண்டலம் குறிச்சி, ஈச்சனாரி, போத்தனுாரில் எட்டு, வடக்கு மண்டலம் சரவணம்பட்டி, துடியலுார், பீளமேடு பகுதிகளில் ஐந்து என, 50 தொட்டிகள் வைக்கப்பட்டன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், அந்தந்த மண்டல தலைவர்கள் முன்னிலையில் இத்தொட்டிகள் நிறுவப்பட்டன. தொட்டிகளை முறையாக பயன்படுத்தவும், பிற வகை கழிவுகளை இதில் போடுவதை தவிர்க்கவும், மக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.