/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை கிடைக்கிறதா?மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை கிடைக்கிறதா?
மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை கிடைக்கிறதா?
மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை கிடைக்கிறதா?
மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை கிடைக்கிறதா?
ADDED : ஜன 13, 2024 01:44 AM

கோவை;பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மருத்துவ காப்பீடு திட்டம் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது; காப்பீடு அட்டை மக்களுக்கு கிடைக்கிறதா; அந்த அட்டையை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எவ்வாறு பயன்படுத்துறார்கள் என விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஏழு லட்சம் பேர் பயன் அடைந்திருக்கின்றனர். நடமாடும் மருத்துவ குழு மூலம், 63 ஆயிரத்து, 679 நபர்களுக்கு ஆய்வக பரிசோதனை, 12 ஆயிரத்து, 792 கர்ப்ப கால கவனிப்பு, 32 ஆயிரத்து, 515 பேருக்கு மகப்பேறு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் முகாம், 80 இடங்களில் நடத்தியதில், 73 ஆயிரத்து, 170 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன், துணை இயக்குனர் அருணா, அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ., டீன் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.