/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க.,வினரின் ஆக்கிரமிப்பு 'ெஷட்' ; வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு தி.மு.க.,வினரின் ஆக்கிரமிப்பு 'ெஷட்' ; வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
தி.மு.க.,வினரின் ஆக்கிரமிப்பு 'ெஷட்' ; வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
தி.மு.க.,வினரின் ஆக்கிரமிப்பு 'ெஷட்' ; வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
தி.மு.க.,வினரின் ஆக்கிரமிப்பு 'ெஷட்' ; வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
ADDED : ஜூன் 10, 2025 09:35 PM

வால்பாறை; அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, தி.மு.க.,வினர் 'ெஷட்' அமைக்க பயன்படுத்திய மரத்தினை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
வால்பாறை நகரில், பல்வேறு இடங்களில் ஆளும்கட்சியினர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தை ஒட்டியுள்ள இடத்தை ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்-அவுட் வைத்து மறைத்துள்ளனர்.
இதை தடுக்க வேண்டிய நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதனிடையே நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய தனியார் எஸ்டேட்டிலிருந்து, 23 மரங்களை வெட்டி, டிராக்டர் வாயிலாக வால்பாறைக்கு கொண்டு வரப்பட்டு 'ெஷட்' அமைத்துள்ளனர்.
மரத்தின் கிளைகளை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் வனத்துறையினர் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என, பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இது வனப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களா அல்லது தனியார் எஸ்டேட்க்கு சொந்தமான இடத்தில் வெட்டப்பட்ட மரங்களா என்பது குறித்து, மானாம்பள்ளி வனச்சரக அலுவர் கிரிதரன் உத்தரவின் பேரில், வனத்துறையினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை நகரில் ஆக்கிரமிப்பின் போது பயன்படுத்தப்பட்ட மரங்களை நேரில் ஆய்வு செய்துள்ளோம். இது வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வெட்டப்பட்டதா அல்லது தனியார் தோட்டப்பகுதியில் வெட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
வனப்பகுதியில் வெட்டப்பட்ட மரமாக இருந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
ஆனால், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை இன்னும் அகற்றாமல் இருப்பதால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.