/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆதிவாசி மக்களின் வீடுகளை மாவட்ட அலுவலர் ஆய்வுஆதிவாசி மக்களின் வீடுகளை மாவட்ட அலுவலர் ஆய்வு
ஆதிவாசி மக்களின் வீடுகளை மாவட்ட அலுவலர் ஆய்வு
ஆதிவாசி மக்களின் வீடுகளை மாவட்ட அலுவலர் ஆய்வு
ஆதிவாசி மக்களின் வீடுகளை மாவட்ட அலுவலர் ஆய்வு
ADDED : ஜன 05, 2024 11:20 PM

மேட்டுப்பாளையம்:இடியும் நிலையில் உள்ள ஆதிவாசி மக்களின் வீடுகளை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம் அருகே, ஓடந்துறை ஊராட்சி, கல்லாறில், ஆதிவாசி மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியின் சார்பில், 1999ம் ஆண்டு இவர்களுக்கு, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் (ஐ.ஏ.ஒய்.,), 119 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த வீடுகள் கட்டி, 24 ஆண்டுகள் ஆனதால், வீடுகளின் மேல் கூரை கான்கிரீட் பெயர்ந்து இடிந்து விழுந்து வருகிறது.
தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர், கடந்த வாரம் இந்த வீடுகளை ஆய்வு செய்தனர். உடனடியாக வீடுகள் எப்போது கட்டியது, அதன் தரம் என்ன என்ற விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கும் படி அதிகாரிகளிடம் குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று கோவை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மணிமேகலை, தாசில்தார் மாலதி, ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல் ஆகியோர் ஆதிவாசி மக்களின் வீடுகளை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் குடியிருக்கும் ஆதிவாசிகள் மக்கள், மழைக்காலத்தில் வீட்டின் மேல் கூரை இடிந்து விழுமோ என்ற அச்சம் உள்ளது. அதனால் இரவில் வீட்டின் உள்ளே படுத்து தூங்க முடியாத நிலையில் உள்ளோம். எங்களுக்கு இந்த வீடுகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலையிடம் கேட்டபோது, ''வீடுகளின் தரம் குறித்து, ஆய்வு செய்து, அதை சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். நிதி ஒதுக்கீடு கிடைத்தால், இவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்,'' என்றார்.