/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/2.62 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்2.62 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
2.62 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
2.62 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
2.62 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
ADDED : ஜன 11, 2024 12:23 AM
கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், இரண்டு லட்சத்து, 62 ஆயிரத்து, 574 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், 1,537 ரேஷன் கடைகள் உள்ளன. 11 லட்சத்து, ஐந்தாயிரத்து, 186 கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. சூலுார் ரேஷன் கடையில், பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி நேற்று துவக்கி வைத்தார்.
நேற்று ஒரே நாளில், இரண்டு லட்சத்து, 62 ஆயிரத்து, 574 கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இது, 23.76 சதவீதம். இன்னும் எட்டு லட்சத்து, 42 ஆயிரத்து, 612 பேருக்கு வழங்க வேண்டும் என்பதால், 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை ரேஷன் கடைகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
வழக்கமாக, மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரேஷன் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி, நாளை (12ம் தேதி) விடுமுறை அளிக்க வேண்டும்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டியிருப்பதால், வெள்ளிக்கிழமை பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாற்று விடுப்பாக, 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை) எடுத்துக் கொள்ள, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு கார்டுதாரருக்கும் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேட்டி, சேலை கொடுக்க வேண்டியிருப்பதால், ஊழியர்களுக்கு உதவியாக, மாநகராட்சியில் இருந்து, ஒவ்வொரு கடைக்கும் மூன்று துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.