/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நொச்சி, ஆடாதொடா நாற்றுகள் வினியோகம் நொச்சி, ஆடாதொடா நாற்றுகள் வினியோகம்
நொச்சி, ஆடாதொடா நாற்றுகள் வினியோகம்
நொச்சி, ஆடாதொடா நாற்றுகள் வினியோகம்
நொச்சி, ஆடாதொடா நாற்றுகள் வினியோகம்
ADDED : அக் 22, 2025 11:00 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டார விவசாயிகளுக்கு, நொச்சி மற்றும் ஆடாதொடா மானியத்தில் வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில் முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் வாயிலாக, 100 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு நொச்சி மற்றும் ஆடாதொடா இலவச கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, ஆடாதொடா -- 25 மற்றும் நொச்சி --- 25 நாற்றுகள் வழங்கப்படும். கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், கிணத்துக்கடவு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி ஆடாதொடா மற்றும் நொச்சி கன்றுகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது, வேளாண் அலுவலகத்தில் இரண்டு நாற்றுகளும் சேர்த்து மொத்தம், 1,700 நாற்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முதலில் வரும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சிட்டா மற்றும் ஆதார் ஜெராக்ஸ் வழங்கி நாற்றுகளை பெற்றுக்கொள்ளலாம். அல்லது உழவன் செயலியில் பதிந்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்ள அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.
இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.


