/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
ஆனைமலை ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
ADDED : செப் 21, 2025 11:05 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே ஆற்றுப்பகுதியில், வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
வடகிழக்கு பருவமழை, அக். மாதம் துவங்கும் நிலையில், அரசு சார்பில் துறை ரீதியாக பல்வேறு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமையில் ஆனைமலை தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் விதமாக, ஆனைமலை ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பேரிடர் காலத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் நபர்களை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி செய்வது உள்ளிட்டவைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.