/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சென்னைக்கு கிளம்பிய பேரிடர் மீட்புக்குழு; அசம்பாவிதம் ஏற்படாததால் நிம்மதி சென்னைக்கு கிளம்பிய பேரிடர் மீட்புக்குழு; அசம்பாவிதம் ஏற்படாததால் நிம்மதி
சென்னைக்கு கிளம்பிய பேரிடர் மீட்புக்குழு; அசம்பாவிதம் ஏற்படாததால் நிம்மதி
சென்னைக்கு கிளம்பிய பேரிடர் மீட்புக்குழு; அசம்பாவிதம் ஏற்படாததால் நிம்மதி
சென்னைக்கு கிளம்பிய பேரிடர் மீட்புக்குழு; அசம்பாவிதம் ஏற்படாததால் நிம்மதி
ADDED : செப் 18, 2025 09:59 PM

வால்பாறை; மழை பாதிப்புக்களை தடுக்கும் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று சென்னை புறப்பட்டனர்.
வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் இறுதியில் தென்மேற்குப்பருவமழை தீவிரமாக பெய்தது. அப்போது, மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வால்பாறைக்கு வந்தனர். கடந்த மூன்று மாதங்களாக வால்பாறையில் முகாமிட்டனர்.
இவர்கள், சுற்றுலா பயணியர் அதிகளவில் செல்லும் சிறுகுன்றா கூழாங்கல் ஆறு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பகல் நேரத்தில் முகாமிட்டனர். இதனால் இந்த ஆண்டு வால்பாறையில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை நிறைவடைந்ததால், மீட்பு படையினர் சென்னைக்கு புறப்பட்டனர். அதற்கு முன், மீட்பு படையினர் கொண்டு வந்துள்ள உபகரணங்களுக்கு பூஜை செய்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டோக்கள், ராம்பாபு, வீரேந்திரசிங் ஆகியோர் கூறியதாவது:
வால்பாறையில், இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக காணப்பட்டாலும், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆறு மற்றும் அருவிகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து சுற்றுலா பயணியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களாக முகாமிட்டு, மழை பாதிப்பின் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வாறு, கூறினர்.