/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாரதியார் பல்கலை வாலிபால்; எஸ்.டி.சி. அணி வெற்றி பாரதியார் பல்கலை வாலிபால்; எஸ்.டி.சி. அணி வெற்றி
பாரதியார் பல்கலை வாலிபால்; எஸ்.டி.சி. அணி வெற்றி
பாரதியார் பல்கலை வாலிபால்; எஸ்.டி.சி. அணி வெற்றி
பாரதியார் பல்கலை வாலிபால்; எஸ்.டி.சி. அணி வெற்றி
ADDED : செப் 18, 2025 10:00 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான, 'சி' மண்டல வாலிபால் போட்டியில், சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி வெற்றி பெற்றது.
பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான, 'சி' மண்டல வாலிபால் போட்டிகள், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் (எஸ்.டி.சி.,) நடந்தது. இதில், 15 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
அரையிறுதி போட்டியில், எஸ்.டி.சி. அணியினர், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியினரை, 2:0 என்ற நேர் செட்களில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி அணியினர், 2:1 என்ற செட்களில், நேருமகா வித்யாலயா கலைக்கல்லுாரி அணியினரை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதி போட்டியில், எஸ்.டி.சி. அணியினர், 3:2 என்ற செட்களில், ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்று சாம்பியன் பட்டம் வென்றனர். நேரு மகாவித்யாலயா கல்லுாரி அணியினர், 2:0 என்ற செட்களில், கிருஷ்ணா கல்லுாரி அணியினரை வென்று மூன்றாமிடம் இடத்தையும், கிருஷ்ணா கல்லுாரி அணி நான்காமிடமும் பெற்றன.
பரிசளிப்பு விழாவில், கல்லுாரியின் தலைவர் வெங்கடேஷ், முன்னாள் வாலிபால் வீரர் செல்லமுத்து, கல்லுாரி முதல்வர் வனிதாமணி ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வரும், உடற்கல்வித்துறை இயக்குனரான பாரதி தலைமையில் மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.