/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தினமலர்- - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி; அபார திறமையால் அசத்திய பள்ளி மாணவர்கள்தினமலர்- - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி; அபார திறமையால் அசத்திய பள்ளி மாணவர்கள்
தினமலர்- - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி; அபார திறமையால் அசத்திய பள்ளி மாணவர்கள்
தினமலர்- - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி; அபார திறமையால் அசத்திய பள்ளி மாணவர்கள்
தினமலர்- - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி; அபார திறமையால் அசத்திய பள்ளி மாணவர்கள்

யுவா பப்ளிக் பள்ளி
பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 170 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி, மூன்று பிரிவுகளாக நடந்தது.
அமிர்தா வித்யாலயம், நல்லாம்பாளையம்.
கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள இப்பள்ளியில் நடந்த, தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 500 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி-வினா போட்டி, மூன்று பிரிவுகளாக நடந்தது.
ஆரிசன் அகாடமி பள்ளி
ஈச்சனாரி - மதுக்கரை மார்க்கெட் சாலையிலுள்ள, 'ஆரிசன் அகாடமி' பள்ளியில் நடந்த, தகுதி சுற்று பொது அறிவு தேர்வு போட்டியில், 80 பேர் பங்கேற்றனர். தேர்வான, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். காலிறுதி மூன்று பிரிவுகளாக நடந்தது.
டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி
ஒத்தக்கால் மண்டபத்திலுள்ள இப்பள்ளியில் நடந்த, தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 375 பேர் தேர்வு எழுதினர். தேர்வான, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். காலிறுதி, மூன்று பிரிவுகளாக நடந்தது. 'டி' அணியின் ஏழாம் வகுப்பு மாணவி கெய்ட்லின் லிட்வினா, ஆறாம் வகுப்பு மாணவர் ஆதித்யா ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகினர்.
மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்
இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 32 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட, 16 பேர், 8 அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி-- வினா போட்டி, 3 பிரிவுகளாக நடந்தது. இதில், 'பி' அணியை சேர்ந்த மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு மாணவியர் கிருஷ்ணபிரியா, சஞ்சனா ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதி போட்டிக்கு முன்னேறினர்.
விக்டரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சரவணம்பட்டி.
இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 80 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி, மூன்று பிரிவுளாக நடந்தது. இதில் 'ஜி' அணியை சேர்ந்த மாணவர் முறையே, 9ம் வகுப்பு நித்தின் மற்றும் 8ம் வகுப்பு நிஷாந்த் ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதி போட்டிக்கு முன்னேறினர்.