/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காட்டுப் பன்றிகளால் பயிர்கள் நாசம் காட்டுப் பன்றிகளால் பயிர்கள் நாசம்
காட்டுப் பன்றிகளால் பயிர்கள் நாசம்
காட்டுப் பன்றிகளால் பயிர்கள் நாசம்
காட்டுப் பன்றிகளால் பயிர்கள் நாசம்
ADDED : மே 21, 2025 11:48 PM
சூலுார்; சுல்தான்பேட்டை அடுத்த அக்கநாயக்கன்பாளையத்தில் நேற்று முன் தினம் இரவு, சரஸ்வதி அம்மாளுக்கு சொந்தமான தோட்டத்தில், 10 க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் புகுந்து, அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த மக்காச்சோள கதிர்களை தின்று சேதப்படுத்தின.
இதனால், பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சரஸ்வதி அம்மாள் வேதனையுடன் கூறினார்.
விவசாயி ஆறுமுகம் கூறுகையில், இரவு நேரங்களில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. பயிர்களை சேதப்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
அரசு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பன்றிகளை சுட அரசு துப்பாக்கி வழங்க வேண்டும், என்றார். தகவல் அறிந்து வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் அக்கநாயக்கன் பாளையத்தில் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்தனர்.