/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேளாண் பல்கலையில் உரம் தயாரிக்க பயிற்சி வேளாண் பல்கலையில் உரம் தயாரிக்க பயிற்சி
வேளாண் பல்கலையில் உரம் தயாரிக்க பயிற்சி
வேளாண் பல்கலையில் உரம் தயாரிக்க பயிற்சி
வேளாண் பல்கலையில் உரம் தயாரிக்க பயிற்சி
ADDED : ஜன 11, 2024 12:24 AM
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பண்ணை கழிவுகள் மற்றும் வேளாண் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து மட்கிய உரம், மண் புழு உரம் தயாரித்தல், செறிவூட்டல் குறித்த ஒரு நாள் சான்றிதழ் பயிற்சி, நாளை அளிக்கப்படவுள்ளது.
விவசாயிகள், பொதுமக்கள், தொழில்முனைவோர், மாணவர்களும் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். பயிற்சி கட்டணம், 750 ரூபாய் செலுத்த வேண்டும். சுற்றுச்சூழல் துறை கம்போஸ்ட் தொழில்நுட்ப வளாகத்தில், பயிற்சி நாளன்று நேரடியாக பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 9500886711/ 0422-6611252 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.