/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
ADDED : ஜூன் 16, 2025 09:45 PM
அன்னுார்; காரமடை, காமராஜ் நகரை சேர்ந்த திருமூர்த்தி மகன் மோனிஷ், 20. ராஜபாளையம், இடையன் குளத்தைச் சேர்ந்த கனகரத்தினம் மகன் விஜய ராஜா, 20. இருவரும் சத்தி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தனர்.
மோட்டார் பைக்கில் நேற்றுமுன்தினம் மதியம் அன்னுாரில் இருந்து பசூருக்கு சென்று கொண்டிருந்தனர். விஜயராஜா பைக்கை ஓட்டினார்.பசூருக்கு முன்னதாக உள்ள பாலத்தில் பைக் திடீரென விபத்துக்கு உள்ளானது. இதில் பைக்கில் பின்புறம் அமர்ந்து வந்த மோனிஷ் மற்றும் ஓட்டி வந்த விஜயராஜா படுகாயம் அடைந்தனர்.
மோனிஷ் அன்னுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விஜய ராஜா அன்னுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.