/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வங்கதேசத்தினர் தங்கி உள்ளனரா? போலீசார் விசாரணை வங்கதேசத்தினர் தங்கி உள்ளனரா? போலீசார் விசாரணை
வங்கதேசத்தினர் தங்கி உள்ளனரா? போலீசார் விசாரணை
வங்கதேசத்தினர் தங்கி உள்ளனரா? போலீசார் விசாரணை
வங்கதேசத்தினர் தங்கி உள்ளனரா? போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 16, 2025 09:45 PM
மேட்டுப்பாளையம்; காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அண்மையில், பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கி தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த ஒரு பெண் உட்பட நான்கு வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வங்கதேசத்தினர் யாராவது சட்டவிரோதமாக தங்கியுள்ளனரா, அவர்கள் தொழில்நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிகின்றனரா, விடுதிகளில் தங்கியுள்ளனரா என போலீசார் சோதனை மேற்கொண்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், காரமடையில் உள்ள அனைத்து தொழில்நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகளில் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களின் விவரங்களை போலீசாருக்கு வழங்க அதன் உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளோம், என்றனர்.