/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை எஸ்.பி. சாம்பியன் துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை எஸ்.பி. சாம்பியன்
துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை எஸ்.பி. சாம்பியன்
துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை எஸ்.பி. சாம்பியன்
துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை எஸ்.பி. சாம்பியன்
ADDED : செப் 20, 2025 11:32 PM
போத்தனுார் : மதுக்கரை அருகே உள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி தளத்தில், கோவை சரக போலீஸ் உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.
கோவை மாவட்டம், மாநகர், திருப்பூர் மாவட்டம், மாநகர், நீலகிரி மாவட்டம், கோவைபுதுார் பட்டாலியன் மற்றும் பி.ஆர்.எஸ்., ஆகியவற்றில் உள்ள டி.எஸ்.பி. முதல் ஐ.ஜி. வரையிலான (10 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 32 பேர்) உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
பிஸ்டல் பிரிவில், 10, 15, 20 மற்றும் 303, ரைபிள் ஆகியவற்றுக்கான, 30 மீட்டர் துார இலக்கை சுடும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொருவரும் தலா 30 ரவுண்டு இலக்கை குறி பார்த்தனர். நேற்று நிறைவு நாள் போட்டிகள் நடந்தன. அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து அதிக புள்ளிகள் எடுத்த, கோவை எஸ்.பி. கார்த்திகேயன் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றார்.
இரண்டாமிடத்தை கோவை ஐ.ஜி. செந்தில்குமார், மூன்றாமிடத்தை திருப்பூர் மாவட்ட எஸ்.பி. கிரீஷ் அசோக் யாதவ் ஆகியோர் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.ஜி. செந்தில்குமார் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை சென்னை கமாண்டோ படை பயிற்சி மைய டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விவேக்ராஜ் உள்ளிட்ட 21 பேர் குழு செய்திருந்தது.