Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை - தன்பாத் தாமதமாக புறப்படும்

கோவை - தன்பாத் தாமதமாக புறப்படும்

கோவை - தன்பாத் தாமதமாக புறப்படும்

கோவை - தன்பாத் தாமதமாக புறப்படும்

ADDED : ஜூன் 23, 2025 11:50 PM


Google News
கோவை; 'கோவை - தன்பாத் ரயில் இன்று எட்டு மணி நேரம் தாமதமாக புறப்படும்' என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை - தன்பாத்(03680) இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. செவ்வாய் கிழமைகளில் காலை, 7:50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

இந்த ரயிலின் இணை ரயில் காலதாமதமாக வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக, கோவை - தன்பாத்(03680) வாராந்திர ரயில், எட்டு மணி நேரம், 25 நிமிடங்கள் தாமதமாக, மாலை 4:15 மணிக்கு புறப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us