/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்
ADDED : ஜன 12, 2024 11:08 PM
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 'இ - நாம்' வாயிலாக மட்டை உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது.
ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.
தேங்காய் ஏலத்தில், 20 தேங்காய் மூட்டைகள் வரத்து இருந்தது. அதில், கிலோவுக்கு குறைந்தபட்சம், 25 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 27.65 ரூபாய் விலை கிடைத்தது.
மூன்று விவசாயிகள், இரண்டு வியாபாரிகள் பங்கேற்றனர். 26,324 ரூபாய் மதிப்பிலான, 10.21 குவிண்டால் தேங்காய் ஏலம் விடப்பட்டது.
வாழைத்தார் ஏலத்தில், மொத்தம், 255 வாழைத்தார்கள் வரத்து இருந்தது. கிலோவுக்கு நேந்திரம், 22 ரூபாய்; கதளி - 30, செவ்வாழை - 50, கற்பூர வள்ளி - 25, பூவன் - 22 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஆறு விவசாயிகள், நான்கு வியாபாரிகள் பங்கேற்றனர். மொத்தம், 64,159 ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டன.