/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 02, 2025 08:58 PM
பொள்ளாச்சி; கோவை போக்குவரத்து ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் கிளை -- 2 முன் நடந்தது. தாலுகா செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார்.
அதில், பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் நாளன்று பி.எப். மற்றும் விடுப்பு சம்பளம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். வாரிசு வேலையை உடனே வழங்க வேண்டும்.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள, 25,000 காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். போக்குவரத்து கழகங்களில் பஸ்களை இயக்க கான்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.