/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நடுரோட்டில் 'சோக்பிட்'; மக்கள் அவதி நடுரோட்டில் 'சோக்பிட்'; மக்கள் அவதி
நடுரோட்டில் 'சோக்பிட்'; மக்கள் அவதி
நடுரோட்டில் 'சோக்பிட்'; மக்கள் அவதி
நடுரோட்டில் 'சோக்பிட்'; மக்கள் அவதி
ADDED : ஜூன் 10, 2025 09:55 PM

போத்தனூர்; கோவை, போத்தனூரில் மாநகராட்சியின், 99வது வார்டுக்குட்பட்டது ஆறுமுகம் பிள்ளை வீதி. இங்குள்ள போலீஸ் குடியிருப்புக்கு பின்புறம், இரண்டாவது வீதியின் துவக்கத்தில் வலதுபுறம், மர வியாபாரி ஒருவரின் வீடு உள்ளது.
இவர் தனது வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சேகரமாக, சோக்பிட் அமைத்துள்ளார். இந்த சோக்பிட் அவரது வீட்டின் முன், செல்லும் தார் சாலையில் உள்ளது. அதனால் இவ்வழியே வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சோக்பிட்டின் மேற்பகுதியில் தொட்டிகளை வைத்து, பூச்செடி வளர்க்கப்படுவதுதான் உச்சகட்ட கொடுமை. இதனால் மக்கள் வாகனங்களில் வரும்போது, சாலையின் ஓரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இச்சோக்பிட்டை அகற்ற, மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.