ADDED : செப் 21, 2025 11:02 PM
பொள்ளாச்சி; அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு, சுத்தம் இல்லாத நீர்நிலைகளில் குளிப்பதன் வாயிலாக, மூக்கின் வழியாக பரவுகிறது. கேரள மாநிலத்தில், 61 பேர் பாதிக்கப்பட்டதில், இதுவரை, 19 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் இதுவரை இப்பாதிப்பு பதிவாகவில்லை என சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''கோவையில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. சுகாதார ஆய்வாளர்கள் வழக்கமான ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, நீச்சல் குளங்கள், நீர்நிலைகளில் குளோரினேஷன் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.