/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பெண்களுக்கு விருது சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பெண்களுக்கு விருது
சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பெண்களுக்கு விருது
சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பெண்களுக்கு விருது
சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பெண்களுக்கு விருது
ADDED : செப் 21, 2025 11:02 PM
பொள்ளாச்சி; சமூக முன்னேற்றத்துக்காக பங்காற்றும், 18 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் விருது வழங்கப்படுகிறது.
கோவை கலெக்டர் பவன்குமார் அறிக்கை: பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றும் 13 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தினமான ஜன. 24ல், விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை, தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், நவ. 11க்குள் (http://awards.tn.gov.in) என்ற இணைய முகவரியில் பதிவேற்ற வேண்டும்.
இளம் சாதனையாளர்களுக்கான, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், கல்வி உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.