/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு
நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு
நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு
நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் அறிவிப்பு
ADDED : ஜூன் 13, 2025 01:14 AM
சேலம்:சேலம், இரும்பாலை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், புது திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, நலத்திட்ட உதவி வழங்குதல் என, முப்பெரும் விழா நடந்தது.
இதில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 2,500 ரூபாய் பெறும் வகையில், சாதாரண ரகத்துக்கு 131 ரூபாயும், சன்னரகத்துக்கு 156 ரூபாய் என, இனி நெல் கொள்முதல் விலலை உயர்த்தி வழங்கப்படும். சாதாரண ரகம் நெல் குவிண்டாலுக்கு இனி, 2,500 ரூபாய், சன்ன ரகம், 2,545 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். இதனால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர்,'' என்றார்.
சேலம் மாநகராட்சியில், 100 கோடி ரூபாய் செலவில் சாலைகள் மேம்பாடு, கழிவுநீர் கால்வாய்கள், சிறு பாலங்கள், செவ்வாய்ப்பேட்டை தினசரி சந்தை, 9 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தல், இலுப்பநத்தம் வேளாண் விற்பனை நிலையம், 10 கோடி ரூபாய் மதிப்பில் தரம் உயர்த்தல் உள்ளிட்ட ஆறு புதிய திட்டங்களை மாவட்டத்திற்கு அறிவித்தார்.