/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்க அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்க அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா
'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்க அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா
'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்க அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா
'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்க அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா
ADDED : பிப் 25, 2024 12:49 AM

மேட்டுப்பாளையம்,:கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா பிப்., 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம், அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.
மாலை 4:50 மணிக்கு, பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, 1,000த்துக்கும் மேற்பட்ட தாசர்கள் சங்கு ஊதினர். சேகண்டி அடித்தனர். பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என, கோஷம் போட்டனர். தேர் மீது பக்தர்கள் வாழைப்பழங்களை வீசி, நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவில், ஹிந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் ரமேஷ், எம்.எல்.ஏ., செல்வராஜ், மாவட்ட அறங்காவலர்கள் நியமன குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம், காரமடை நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், ஒன்றிய சேர்மன் மணிமேகலை மகேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தினர் திருப்பூர், கோவை, சத்தி, மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து, சிறப்பு பஸ்களை இயக்கினர்.