/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தெரு நாய் கடித்து கன்று குட்டிகள் உயிரிழப்பு தெரு நாய் கடித்து கன்று குட்டிகள் உயிரிழப்பு
தெரு நாய் கடித்து கன்று குட்டிகள் உயிரிழப்பு
தெரு நாய் கடித்து கன்று குட்டிகள் உயிரிழப்பு
தெரு நாய் கடித்து கன்று குட்டிகள் உயிரிழப்பு
ADDED : செப் 09, 2025 10:31 PM

சூலுார்; காடாம்பாடியில் தெரு நாய்கள் கடித்து இரு கன்று குட்டிகள் உயிரிழந்தன.
சூலுார் அடுத்த காடாம்பாடி ஊராட்சி பாப்பாங்காட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன், 50. விவசாயி. இவர் மாடு வளர்க்கிறார்.
நேற்று முன் தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு, மாடுகள் மற்றும் கன்று குட்டிகளை தோட்டத்து சாலையில் கட்டியிருந்தார்.நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்த தெரு நாய்கள், கன்று குட்டிகளை கண்டித்துள்ளன.
இதில், இரு கன்று குட்டிகள் உயிரிழந்தன. ஒரு கன்றுக்குட்டிக்கு, காதில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனை கண்ட விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ஊரில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக திரிந்து ரோட்டில் நடந்து செல்வோரை கடிக்கின்றன. குழந்தைகள், பெண்கள் அச்சமடைந்துள்ளனர். தற்போது, தோட்டத்தில் நாய்கள் கடித்து இரு கன்று குட்டிகள் இறந்துள்ளன. ஊராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த கன்று குட்டிகளுக்கான நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.