/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்டிக்கொடுங்க! மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்டிக்கொடுங்க!
மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்டிக்கொடுங்க!
மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்டிக்கொடுங்க!
மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்டிக்கொடுங்க!
ADDED : ஜூன் 03, 2025 11:54 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் கவுதம் லிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
மனுவில், 'பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாக்கினாம்பட்டியில் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் நெருக்கடியான இடத்தில் தகரம் மற்றும் ஓலை குடிசைகளில் வாழ்கின்றனர்.
மழை காலம் துவங்க உள்ள நிலையில், மக்களின் வசதிக்காக, மத்திய அரசு திட்டமான, பிரதமர் ஆவாஸ் யோஜானா திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும். இதற்கு, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


