ADDED : செப் 14, 2025 11:18 PM

மேட்டுப்பாளையம்; காரமடை நகர பா.ஜ. சார்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி பகுதியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இங்கு பெறப்பட்ட ரத்தம், காரமடை அரசு சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டது. மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவைகளும் பரிசோதனை செய்யப்பட்டன.
காரமடை பா.ஜ., நகர தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.---