/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பஸ் ஸ்டாண்ட் அருகில் பிளக்ஸ்; போக்குவரத்துக்கு இடையூறு!பஸ் ஸ்டாண்ட் அருகில் பிளக்ஸ்; போக்குவரத்துக்கு இடையூறு!
பஸ் ஸ்டாண்ட் அருகில் பிளக்ஸ்; போக்குவரத்துக்கு இடையூறு!
பஸ் ஸ்டாண்ட் அருகில் பிளக்ஸ்; போக்குவரத்துக்கு இடையூறு!
பஸ் ஸ்டாண்ட் அருகில் பிளக்ஸ்; போக்குவரத்துக்கு இடையூறு!

மண்ணை அகற்றணும்
மழைநீர் வடிகால் கட்டுவதற்காக, தோண்டப்பட்ட மண்ணை உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப் பள்ளி முன் நகராட்சி அதிகாரிகள் கொட்டி வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி கொட்டப்பட்ட மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனங்களால் இடையூறு
உடுமலை, பழநி ரோட்டில் காந்திநகர் பஸ் நிறுத்தம் முன் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அங்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் ஊற்றுங்க!
உடுமலை - பழநிரோட்டில் சென்டர்மீடியனில் செடிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு தண்ணீர் ஊற்றாததால், செடிகள் காய்ந்து வருகின்றன. இதை பார்க்கும் மக்கள் வேதனையடைகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் காய்ந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளக்ஸ்களால் பாதிப்பு
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் அருகே பிளக்ஸ் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. அவற்றை முழுவதுமாக அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணியர் சிரமம்
உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து தாராபும் ரோடு செல்லும் வழியில் உள்ள பஸ் ஸ்டாப் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். நிழற்கூரை வசதிகளும் இல்லாமல், பயணியர் நீண்ட நேரம் வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர்.
ஒளிராத தெருவிளக்குகள்
உடுமலை, தில்லை நகரில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் மாலை நேரங்களில் வெளியில் செல்வோர் திருட்டு பயத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் இருள் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பகுதியில், வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட கனரக வாகனங்கள் அப்பகுதியை கடக்கும்போது மிகவும் சிரமப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தகர சீட்டால் இடையூறு
பொள்ளாச்சி, பஸ் ஸ்டாண்ட்டில், பஸ் ரேக்கில் கட்டுமான பணி முடிந்தும் தகர சீட்டுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்டில், தகர சீட்டுகளால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து அகற்றம் செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோட்டில் கழிவு நீர்
பொள்ளாச்சி, ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்பக்கம் மாக்கினாம்பட்டி செல்லும் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ரோட்டில் கழிவுநீர் தேங்காமல் தடுக்க, துாய்மை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுகள் குவிப்பு
பொள்ளாச்சி, வஞ்சியாபுரம் செல்லும் வழித்தடத்தில் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள விளை நிலத்தில் அதிகளவு குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவை 'குடி'மகன்கள் கொட்டி செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கடை அடைப்பு
நெகமம் - தாராபுரம் ரோட்டில், தனியார் பேக்கரி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில், அதிகளவு கழிவு தேங்கி, சாக்கடை அடைத்துள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து, கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதருக்குள் போர்டு
கிணத்துக்கடவு தாலுகா அலுவலக பெயர் பலகை புதருக்குள் மறைந்திருக்கிறது. இதனால், இங்கு வரும் பொதுமக்கள் தவறுதலாக ஒன்றிய அலுவலகம் செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, பெயர் பலகை முன்பாக இருக்கும் புதரை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.