/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 09, 2025 10:21 PM
அன்னுார்; மாவட்ட அளவிலான முப்பெரும் விழாவில், அதிக அளவில் பங்கேற்க பா.ஜ., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அவிநாசி தொகுதி அளவிலான, பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அன்னுார் அருகே இரத்தினமூர்த்தி மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு பா.ஜ., மாநில மகளிர் அணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வருகிற 19ம் தேதி அவிநாசி, கொங்கு கலையரங்கில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதில் 1,008 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையும், மத்திய பா.ஜ., அரசின் 11 ஆண்டு சாதனை பிரச்சார துவக்க விழாவும், பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவும் இணைந்து கொண்டாடப்பட உள்ளது. இதில் அன்னுார், அவிநாசி வட்டாரங்களில் இருந்து அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரியதர்ஷினி, விக்னேஷ், செயலாளர்கள் ராஜராஜசாமி, கஸ்தூரி பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.