ADDED : மே 24, 2025 01:03 AM
சூலுார் : சுல்தான்பேட்டை மேற்கு மண்டல பா.ஜ., நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து ஒப்புதலுடன், சுல்தான்பேட்டை மேற்கு மண்டல பா.ஜ., தலைவர் கணேசன், நிர்வாகிகளை நியமித்துள்ளார். மண்டல பொதுச்செயலாளர்களாக, சித்தநாயக்கன்பாளையம் கனகராஜ், பச்சாபாளையம் சதீஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.துணைத்தலைவர்களாக, கனகராஜ், கார்த்திகேயன், தாமோதரன், சுரேஷ், சுசீலாவும், பொருளாளராக செல்வராஜும், செயலாளர்களாக, தனலட்சுமி, புஷ்பா, அஜய், ராம்ராஜ், சிவக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.