/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளி மாணவியருக்கானபீச் வாலிபால் போட்டிபள்ளி மாணவியருக்கானபீச் வாலிபால் போட்டி
பள்ளி மாணவியருக்கானபீச் வாலிபால் போட்டி
பள்ளி மாணவியருக்கானபீச் வாலிபால் போட்டி
பள்ளி மாணவியருக்கானபீச் வாலிபால் போட்டி
ADDED : ஜன 05, 2024 12:58 AM

கோவை;வருவாய் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் மாணவியர் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
கோவை வருவாய் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி காரமடை அர்ச்சனா அவன்யூவில் நேற்று நடந்தது.
பள்ளி மாணவியருக்கு 14, 17,19 வயது பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை எஸ்.வி.ஜி.வி., பள்ளி நிர்வாக அதிகாரி சதீஷ் துவக்கி வைத்தார்.இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிட்டன.
14 வயது பிரிவில் தடாகம் அரசு பெண்கள் பள்ளி முதலிடம், எஸ்.வி.ஜி.வி., பள்ளி இரண்டாமிடம், பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளி மூன்றாமிடம் பிடித்தன. சிறந்த வீராங்கனையாக தடாகம் அரசு பெண்கள் பள்ளியின் சந்தியா தேர்வு செய்யப்பட்டார்.
17 வயது பிரிவில் அகர்வால் பள்ளி முதலிடம், ஏ.பி.சி., பள்ளி இரண்டாமிடம், தடாகம் அரசு பெண்கள் பள்ளி மூன்றாமிடம் பிடித்தன. சிறந்த வீராங்கனையாக அகர்வால் பள்ளி மாணவி ஜீவிகா தேர்வு செய்யப்பட்டார்.
19 வயது பிரிவில், செயின்ட் ஜோசப் பள்ளி முதலிடம், பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளி இரண்டாமிடம், தொண்டாமுத்துார் அரசு பெண்கள் பள்ளி மூன்றாமிடம் பிடித்தன. செயின்ட் ஜோசப் பள்ளியின் கவுசினி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.