/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பேராசிரியர்களுக்கான பூப்பந்து; பி.எஸ்.ஜி., டெக் கல்லூரி வெற்றிபேராசிரியர்களுக்கான பூப்பந்து; பி.எஸ்.ஜி., டெக் கல்லூரி வெற்றி
பேராசிரியர்களுக்கான பூப்பந்து; பி.எஸ்.ஜி., டெக் கல்லூரி வெற்றி
பேராசிரியர்களுக்கான பூப்பந்து; பி.எஸ்.ஜி., டெக் கல்லூரி வெற்றி
பேராசிரியர்களுக்கான பூப்பந்து; பி.எஸ்.ஜி., டெக் கல்லூரி வெற்றி
ADDED : ஜன 08, 2024 01:37 AM
கோவை:ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் நடந்த பேராசிரியர்களுக்கான பூப்பந்து இறுதிப்போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியை வீழ்த்தி, பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி முதலிடம் பிடித்தது.
ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், பேராசிரியர்களுக்கான 18வது மாவட்ட அளவிலான எஸ்.என்.ரங்கசாமி நினைவு பூப்பந்து போட்டி, கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில், 10 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி அணி 2 - 0 என்ற நேர் செட் கணக்கில், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில், கே.சி.டி., அணி 2 - 1 என்ற செட் கணக்கில் ரோவர் இன்ஜி., கல்லுாரி அணியை வீழ்த்தியது.
வெற்றி பெற்ற அணியினருக்கு, ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் மெக்கானிக்கல் துறை பேராசிரியர் அமர்நாத் பரிசுகளை வழங்கினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் நித்தியானந்தன் செய்திருந்தார்.